கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தைப் படிப்படியாக முடக்குவதற்கு அரசு திட்டமிடுகிறதா என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஆக உரிமைத்தொகையை உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ஏற்கெனவே மாதம் ரூ.1,000 பெற்று வரும் தகுதியுள்ள பெண்களுக்குக்கூட எந்தக் காரணமும் தெரிவிக்காமல் உதவித்தொகையை நிறுத்த முற்படுவது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தகைய நடவடிக்கை பெண்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தகுதியுள்ள பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகையைத் தொடர்ந்து வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், உரிய பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தை உடனடியாக விளக்க வேண்டும் என்றும் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
கோயில்களில் ஆட்சியாளர்களைப் பாராட்டும் நடவடிக்கைகள் நடைபெற்றதில்லை – கனிமொழி எம்.பி. விமர்சனம்!
