தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள எடையாளர் பணியிடங்களை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தற்காலிகமாக நிரப்புவதற்கு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் நவம்பர் 23-ஆம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெயச்சந்திர ராஜா, தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் காலியாக இருக்கும் எடையாளர் பணியிடங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாகக் காலதாமதமின்றி உடனடியாக நிரப்ப வேண்டும் எனச் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், சுமார் 1,900 காலிப் பணியிடங்கள் மற்றும் தற்காலிக எடையாளர் பணியிடங்களை ‘மகளிர் திட்டம்’ மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக நிரப்புவதற்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகக் கூறினார்.
இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில மையம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் நவம்பர் 23-ஆம் தேதி திங்கட்கிழமை, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
மேலும், இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றக் கிளையை அணுகவும் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பிற சங்கங்களையும் ஒருங்கிணைத்து அடுத்தகட்டப் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜெயச்சந்திர ராஜா தெரிவித்தார்.