Homeசெய்திகள்தமிழ்நாடு“காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயரே பொருத்தமானது” – சட்டப்பேரவையில் எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

“காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயரே பொருத்தமானது” – சட்டப்பேரவையில் எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

-

- Advertisement -

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிக் கொறடா எ.வ.வேலு எழுப்பிய கேள்விகளுக்குப் பள்ளிக் கல்வி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாகப் பதிலளித்துப் பேசினார். “காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயரே பொருத்தமானது” – சட்டப்பேரவையில் எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

கருணாநிதி பெயர் சர்ச்சை:சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் சுட்டிக்காட்டிப் பேசியதற்கு விளக்கமளித்த அமைச்சர் ராஜ்மோகன்:”நாங்கள் முத்தமிழறிஞர் கருணாநிதியை எப்போதும் மதிக்கிறோம்.

we-r-hiring

அவை விவாதத்தின் போது அவரது பெயரை உறுப்பினர் தவறாகக் குறிப்பிட்டதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே தனது வருத்தத்தைப் பதிவு செய்துவிட்டார்.

திமுகவுக்குப் பதிலடி:முந்தைய அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்குச் சூட்டப்பட்ட பெயர்களை திமுக ஆட்சிக் காலத்தில் மாற்றிய வரலாற்றை நினைவு கூர்ந்த அமைச்சர், தற்போதைய அரசைக் குறை கூற எதிர்க்கட்சிகளுக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்று கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்தார்.

காமராஜர் பெயர் தான் பொருத்தமானது: காலை உணவுத் திட்டத்திற்குப் பெயர் சூட்டுவது தொடர்பான விவாதத்தின் போது, “பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கும் திட்டத்திற்குக் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெயரை விடப் பொருத்தமான பெயர் வேறெதுவும் இருக்க முடியாது” என்று உறுதியாகத் தெரிவித்தார்.

மக்கள் வரிப்பணமும் கலைநயமும்:  தொடர்ந்து பேசிய அவர், “மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சட்டப்பேரவை வளாகம் என்பது வெறும் கட்டிடமல்ல; அது ஜனநாயகத்தின் கலைநயமிக்க ஒரு சின்னம். அதன் கண்ணியத்தைக் காப்பது அனைவரின் கடமை” எனக் கூறி உரையை முடித்தார்.

“பெரியாரை கொள்கை தலைவர்னு சொல்றீங்க…” — பூட்டிக் கிடக்கும் பெரியார் அறிவுலகம் குறித்து எ.வ.வேலு விளாசல்!

MUST READ