Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்சியில் காங்கிரஸ் எம்.பி.-தவெக எம்.எல்.ஏ. இடையே மோதல்! குத்துவிளக்கேற்றும் நிகழ்வில் பரபரப்பு – அமைச்சர் ரமேஷ் சமரசம்

திருச்சியில் காங்கிரஸ் எம்.பி.-தவெக எம்.எல்.ஏ. இடையே மோதல்! குத்துவிளக்கேற்றும் நிகழ்வில் பரபரப்பு – அமைச்சர் ரமேஷ் சமரசம்

-

- Advertisement -

திருச்சியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் மற்றும் தவெக எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் வாக்குவாதம் மற்றும் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சியில் காங்கிரஸ் எம்.பி.-தவெக எம்.எல்.ஏ. இடையே மோதல்! குத்துவிளக்கேற்றும் நிகழ்வில் பரபரப்பு – அமைச்சர் ரமேஷ் சமரசம்

குத்துவிளக்கேற்ற சென்றபோது பரபரப்பு

we-r-hiring

விழாவில் குத்துவிளக்கேற்றுவதற்காக காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் சென்றபோது, அவரது கையில் இருந்த மெழுகுவர்த்தியை தவெக எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி வலுக்கட்டாயமாகப் பிடுங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், எம்.பி. கையில் இருந்த மெழுகுவர்த்தியை தவெக எம்.எல்.ஏ. கீழே தள்ளிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு

விழாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், குத்துவிளக்கேற்றும் நிகழ்வின்போது ஏற்பட்ட இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையை அங்கிருந்தவர்கள் கவனித்த நிலையில், நிகழ்ச்சியில் பதற்றமான சூழல் உருவானதாக கூறப்படுகிறது.

அமைச்சர் ரமேஷ் சமரசம்

இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த அமைச்சர் ரமேஷ் இருவரிடமும் பேசி சமரசம் செய்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

காங்கிரஸ் எம்.பி. மற்றும் தவெக எம்.எல்.ஏ. இடையே விழா மேடையில் ஏற்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவம் திருச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வள்ளலார் ஏற்றிய அணையா விளக்கைப் போல கருத்துகள் சுடர்விட வேண்டும்! – மு.க.ஸ்டாலின்

MUST READ