Homeசெய்திகள்தமிழ்நாடுஇளைஞர்களின் உந்துசக்தி சுவாமி விவேகானந்தர் - நினைவுதினத்தில் டி.டி.வி.தினகரன் புகழஞ்சலி!

இளைஞர்களின் உந்துசக்தி சுவாமி விவேகானந்தர் – நினைவுதினத்தில் டி.டி.வி.தினகரன் புகழஞ்சலி!

-

- Advertisement -

நமது நாட்டின் ஆன்மீகப் பெருமைகளை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் நினைவுதினத்தை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.இளைஞர்களின் உந்துசக்தி சுவாமி விவேகானந்தர் - நினைவுதினத்தில் டி.டி.வி.தினகரன் புகழஞ்சலி!​இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,​”நம் நாட்டின் கலாச்சார, பண்பாட்டு மற்றும் ஆன்மீகப் பெருமைகளை உலக அரங்கில் மிக உன்னதமாக உயர்த்திப் பிடித்தவர் சுவாமி விவேகானந்தர். துணிச்சலின் உருவமாகவும், ஆன்மீகத்தின் உயிர் வடிவமாகவும் திகழ்ந்து ஒட்டுமொத்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் மாபெரும் தன்னம்பிக்கையை ஊட்டியவர் அவர். அத்தகைய வீரத் துறவியின் நினைவுதினம் இன்று போற்றப்படுகிறது.இளைஞர்களின் உந்துசக்தி சுவாமி விவேகானந்தர் - நினைவுதினத்தில் டி.டி.வி.தினகரன் புகழஞ்சலி!நீ எதுவாக நினைக்கிறாயோ, அதுவாகவே நீ ஆவாய்!” ​என்ற ஆழமான உன்னத தத்துவத்தின் மூலம், இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு என்றும் அழியாத பேராற்றலாகவும் உந்து சக்தியாகவும் சுவாமி விவேகானந்தர் விளங்கி வருகிறார். ​நமது தேசத்திற்கும் மனிதகுலத்திற்கும் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளையும், அவரது தீர்க்கமான கருத்துகளையும் நாம் எப்போதும் நெஞ்சில் நினைவில் வைத்துப் போற்றிடுவோம்” என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் சாமி தரிசனம்!

MUST READ