spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பெண்கள் முன்னேற்றத்திற்காக மோடி - குஷ்பு

பெண்கள் முன்னேற்றத்திற்காக மோடி – குஷ்பு

-

- Advertisement -

கடந்த 8 ஆண்டுகளில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளதாக, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ பங்கேற்றிருந்தார்.

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் டாட் ஸ்கூல் ஆப் டிசைன் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில் குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

we-r-hiring

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “மார்ச் 8ம் தேதி தேசிய மகளிர் தினம் கொண்டாடி வருகிறோம். மகளிர் தினத்தை ஏன் மார்ச் 8-ம் தேதி ஒரு நாள் மட்டும் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு நாளும் மகளிரை கொண்டாட வேண்டும்.

நாம் தாய் நாடு, தாய்மொழி என்று தானே எப்போதும் சொல்லுகிறோம். ஆகையால் மகளிருக்கு வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்மார்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், நம் நாட்டிற்காக உழைத்தவர்கள், மாற்றத்தை விரும்பும் அனைத்து பெண்மணிகள் குறித்து இங்கே காட்சி படுத்தியுள்ளனர்.

அவர்கள் குறித்து இந்த தலைமுறைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இன்று நாம் இந்த அளவிற்கு சுதந்திரமாக இருக்கிறோம் என்றால், அது இன்று நேற்று கிடைத்த சுதந்திரம் அல்ல; இன்று நேற்று நடந்த போராட்டம் அல்ல; இதற்குப் பிறகு எத்தனையோ வருட போராட்டங்கள், பல தாய்மார்களின் தியாகங்கள் இருக்கிறது.

கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி பெண்களுடைய முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். விறகு அடுப்புகளை வைத்துக்கொண்டு பெண்கள் சிரமப்பட்டு வந்த பெண்கள், உஜ்ஜுவல் யோஜனா வந்த பின்னர் கிட்டத்தட்ட ஐந்து கோடி பெண்கள் இந்த திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

பெண்கள் சொந்த கால்களில் நிற்க வேண்டும் என்பதற்காகவும் , அவர்களது முன்னேற்றத்திற்காகவும் முத்ரா யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு ரூ. 10 லட்சம் வரையில் கடன் உதவி வழங்கப்படுகிறது.

இஸ்லாமிய பெண்களின் நலனுக்காக முத்தலாக் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுபோன்று பெண்களை பாதுகாக்கவும் அவர்களது முன்னேற்றத்திற்காகவும் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.

சமையல் கேஸ் சிலிண்டர் விலை இந்தியாவில் மட்டும் அதிகரிக்கவில்லை; உலகம் முழுவதும் அதிகரிக்கிறது. ஆனால் இங்கு மட்டும் தான் இது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்களுக்கு முன்னேற்றத்திற்காக நம்முடைய பங்களிப்பு என்ன என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

அனைத்திலும் அரசியலை எதிர்பார்க்கக் கூடாது. எல்லாவற்றிலும் அரசியலை நுழைத்து பார்ப்பதில் என்ன பயன் அடையப் போகிறீர்கள். இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் திமுகவை ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை பெண்களுக்காக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்.

வெறும் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டால் அனைத்து முடிந்து விடுமா? அல்லது கொடுக்கிறோம் என்று சொன்ன 1000 ரூபாயையாவது கொடுத்தீர்களா? பெண்களுடைய முன்னேற்றத்திற்காக ஒட்டுமொத்தமாக குரல் கொடுக்கலாமே தவிர அனைத்திலும் அரசியலைப் புகுத்தி பார்க்க கூடாது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான அமைதியான சூழ்நிலை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பது தேசிய மகளிர் ஆணையத்தின் பொறுப்பு.

பெண்களுக்கு நிறைய தடைகள் உள்ளன. பெண்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது ஆணாதிக்க சிந்தனை கொண்ட ஆண்களே. பல நேரங்களில் பெண்களே அவர்களுடைய தேவைகளை விட்டுக் கொடுத்து விடுகின்றனர். பெண்களுக்கு முன்னேற வேண்டும் என்பது அவரவர்களுடைய நம்பிக்கை.

பெண்கள் இதை தான் செய்ய வேண்டும், இதை தான் செய்யக்கூடாது, இப்படித்தான் வாழ வேண்டும், இப்படி வாழக்கூடாது என்று சொல்லுகின்ற உரிமைகள் யாருக்கும் கிடையாது. ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ, அது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை. அதில் தலையிடுவதற்கு அதன் கருத்து சொல்வதற்கு யாருக்குமே எந்த உரிமையும் கிடையாது.

ஒரு பெண் தந்தை, கணவர், அண்ணன், தம்பி என அனைவருக்கும் பதில் கொடுப்பதிலேயே பெண்களுடைய வாழ்க்கை சென்று விடுகிறது. பெண்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். அவர்கள் என்ன செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்பதை அவர்கள் யோசிக்க சுதந்திரம் இருக்க வேண்டும். ” என்று கூறினார்.

MUST READ