தங்கலான் படத்திற்கு நான்கு மணி நேரம் மேக்கப் போடுகிறார் நடிகர் விக்ரம்.
நடிகர்கள் சிவாஜிகணேசன், கமலஹாசன் இவர்களுக்குப் பிறகு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடிப்பவர் என்ற பெருமைக்குரியவர் நடிகர் விக்ரம்.
நடிகர் விக்ரம் சேது, காசி ஆகிய படங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் பார்வை இல்லாதவராகவும், நடித்துள்ளர். இப்படங்கள் இவருக்கு மத்திய மாநில விருதுகளை பெற்றுதந்தது.

அதைத் தொடர்ந்து பிதாமகன், தெய்வத்திருமகன், அன்னியன், பீமா, ஐ, இருமுகன், கடாரம்கொண்டான், பொன்னியின் செல்வன் போன்ற படங்களிலும் தன் தோற்றத்தை மாற்றி நடித்திருக்கிறார். இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடிகர் விக்ரம் நடித்து கொண்டிருகிறார்.
இப்படத்திலும் தன்னை உருமாற்றி உள்ளார் விக்ரம். கோலார் தங்க வயலில் பணியாற்றிய தமிழர்களின் அவல நிலையை சித்தரிக்கும் கதை அம்சத்தில் இப்படம் தயாராவதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பகுதி படப்பிடிப்பை கோலார் தங்க வயல் பகுதியிலேயே நடத்தி வருகிறார்கள்.
இந்த படத்தில் விக்ரம் சட்டை அணியாமல் வேட்டியை கோவனமாக கட்டிக்கொண்டு கையில் ஆயுதம் ஏந்தி மிடுக்கான தோற்றத்தில் நிற்பது போல் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இத்தோற்றத்திற்கு, மாற நடிகர் விக்ரம் நான்கு மணி நேரம் மேக்கப் போட்டு நடிப்பதாக இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.