Homeசெய்திகள்சினிமா'மார்க் ஆண்டனி' படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பு...... நன்றி தெரிவித்த விஷால்!

‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பு…… நன்றி தெரிவித்த விஷால்!

-

- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இதில் எஸ் ஜே சூர்யா, அபிநயா, செல்வராகவன், சுனில், ரித்து வர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சயின்ஸ் ஃபிக்சன் டைம் ட்ராவல் உருவான இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது.

இது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் எல்லோருக்குமே தெரியும் செப்டம்பர் 15 மார்க் ஆண்டனி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. கடவுளின் ஆசிர்வாதத்தால் எந்த படமும் ஜெயித்ததில்லை. இன்றைக்கு மார்க் ஆண்டனி திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் பாராட்டியதற்காகவும்,ஆதரவளித்ததற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் கொடுத்த காசுக்கு படத்தைப் பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடு மட்டும் இல்லாமல் கேரளா, ஆந்திர பிரதேசத்திலும் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிம்பு, கார்த்தி, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் படத்தை பார்த்து ஊக்குவித்துள்ளனர். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தடுத்து உழைத்து நல்ல படங்களை கொடுப்பேன். கண்டிப்பாக ஒவ்வொரு டிக்கெட் க்கும் ஒரு ரூபாயை உங்களின் சார்பாக விவசாயத்திற்கு கொடுப்பேன் நன்றி” இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

MUST READ