Homeசெய்திகள்சினிமா'மார்க் ஆண்டனி' ட்ரைலருக்கு கிடைத்த பேராதரவு..... நன்றி தெரிவித்த விஷால்!

‘மார்க் ஆண்டனி’ ட்ரைலருக்கு கிடைத்த பேராதரவு….. நன்றி தெரிவித்த விஷால்!

-

- Advertisement -

விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டைம் டிராவல் சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்படி சமூக வலைதளங்களில் 18 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அந்த அளவிற்கு டிரைலரானது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

இது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மார்க் ஆண்டனி ட்ரைலரை பார்த்து, ரசித்து, பேராதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. மார்க் ஆண்டனி செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது செப்டம்பர் 22 இந்தியில் வெளியாக இருக்கிறது. எங்களின் உழைப்பை மதித்ததற்கு, ட்ரைலரை பார்த்ததற்கு, ஆதரவளித்ததற்கு நன்றி. டிரைலரில் என்ன பார்த்தீர்களோ அதையே 2:30 மணி நேரம் செப்டம்பர் 15 இல் கண்டிப்பாக, திரையரங்கிலும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்த அளவிற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. அனைவருக்கும் நன்றி” என்று பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

MUST READ