- Advertisement -
விஜே ப்ரியங்கா லண்டன் வீதியில் டான்ஸ் ஆடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் தொலைக்காட்சி வட்டாரத்தில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக வலம் வருபவர் பிரியங்கா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை விஜே பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.

அவரின் கலகலப்பான பேச்சுக்கும் நகைச்சுவைக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது தனது 31-வது பிறந்தநாளை கொண்டாட பிரியங்கா லண்டனுக்கு சென்றிருக்கிறார்.
தனக்கு 31-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டு அவர் ஜாலியாக லண்டன் வீதியில் நடனம் ஆடுகின்றார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் அந்தப் பதிவை அடுத்து அவருக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram