Homeசெய்திகள்சினிமா'புஷ்பா 2' படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் எப்போது?

‘புஷ்பா 2’ படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் எப்போது?

-

புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.'புஷ்பா 2' படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் எப்போது?

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இந்திய அளவில் பிரபலமான திரைப்படம் தான் புஷ்பா. புஷ்பா தி ரைஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்த படம் கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். 'புஷ்பா 2' படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் எப்போது?இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். இதன் மாபெரும் வெற்றிக்கு பிறகு சுகுமார் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். புஷ்பா தி ரூல் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் 2024 ஆகஸ்ட் 14இல் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடலையும் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். அடுத்ததாக இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 'புஷ்பா 2' படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் எப்போது?அதன்படி புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த பாடல் ஆனது அல்லு அர்ஜுனுக்கும் ராஷ்மிகாவிற்கும் இடையிலான காதல் பாடலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ