Homeசெய்திகள்சினிமாவிரைவில் உருவாகும் யுவன் சங்கர் ராஜா பயோபிக்... இளம் இயக்குநர் இயக்கம்....

விரைவில் உருவாகும் யுவன் சங்கர் ராஜா பயோபிக்… இளம் இயக்குநர் இயக்கம்….

-

பிரபல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாம்.

தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த வெற்றிகரமான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அவருடைய இசையில் வெளியான அனைத்து பாடல்களும் மெகா ஹிட் அடித்துள்ளன. யுவன் பாடல்களுக்கு அன்று முதல் இன்று வரை தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. காதல், மகிழ்ச்சி, சோகம், சந்தோஷம் என அனைத்திற்கும் ஏற்றபடி பல பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார், காதல் தோல்வி பாடல்கள் என்றாலே யுவன் தான் அனைத்து இளைஞர்களுக்கும் நினைவுக்கு வரும், அந்த அளவு அவரது பாடல்கள் ஹிட்.

இவர் இசையமைப்பு மட்டுமன்றி பல பாடல்களை பாடியும் வருகிறார். ஆல்பம் பாடல்களையும் தயாரித்து வருகிறார். அண்மையில் அவரது தயாரிப்பில் பொன் ஒன்று கண்டேன் திரைப்படமும் வெளியானது. தற்போது, தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். மேலும், கவின் நடிக்கும் ஸ்டார் திரைப்படத்திற்கும் அவர் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தை இளம் இயக்கி இருக்கிறார்.
இந்நிலையில், இசை அமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பியார் பிரேமா காதல், ஸ்டார் ஆகிய படங்களை இயக்கி பிரபலம் அடைந்த இளன் இயக்க உள்ளாராம். இது தொடர்பாக யுவன் சங்கர் ராஜாவிடம் பேசி ஒப்பந்தம் பெற்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

MUST READ