spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தெலுங்கு சினிமாவை ஆக்கிரமிக்கும் மலையாள அழகிகள்… லிஸ்டில் இணைந்த விஷால் பட நடிகை!

தெலுங்கு சினிமாவை ஆக்கிரமிக்கும் மலையாள அழகிகள்… லிஸ்டில் இணைந்த விஷால் பட நடிகை!

-

- Advertisement -

பிரபல மலையாள நடிகை தர்ஷனா தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபலமான மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன் சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். “வைரஸ்” “இருள்” “ஹிருதயம்” மற்றும் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்திருந்தார்.
ஹிருதயம் படத்தின் வெற்றி தர்ஷனாவின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.

we-r-hiring

தர்ஷனா தமிழில் கவண் மற்றும் விஷாலின் இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தர்ஷனா தற்போது தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சினிமா பண்டி படத்தின் மூலம் அறிமுகமான பிரவீன் கந்த்ரேகுலா இயக்கத்தில் தனது முதல் தெலுங்குப் படத்தில் நடிக்க இருக்கிறார் தர்ஷனா. மேலும் இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படத்தின் தயாரிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் தெலுங்குத் திரையுலகில் வரவேற்பு பெற்று வருகின்றனர். அந்த பட்டியலில் தற்போது தர்ஷனாவும் இணைந்துள்ளார்.

MUST READ