Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டிக்கு சிறை தண்டனை

திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டிக்கு சிறை தண்டனை

-

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டிக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தர்ம பிரச்சார பரிஷத்தில் 2005 ஆண்டில் ஒப்பந்த ஊழியர்கள் சிலர் பணியில் நியமனம் செய்யப்பட்டனர். இதில் மூவரை தவீர்த்து சிலர் மட்டும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து 2010 ஆண்டு மூன்று ஊழியர்கள் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி தலைமையில் வழக்கு விசாரனை அனைத்து முடிந்த பின்னர் மூன்று ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய கடந்த காலத்தில் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவை தேவஸ்தான அதிகாரிகள் அலட்சியப்படுத்தி பணி நிரந்தரம் உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் நீதிமன்றத்தில் அவமதிப்பு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஒற்றை நீதிபதி பெஞ்ச் ஊழியர்கள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே அமல்படுத்தவில்லை என தனது கோபத்தை வெளிப்படுத்தினர். நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத செயல் அதிகாரி தர்மா ரெட்டிக்கு இன்று நீதிபதி ஒரு மாத சிறை தண்டனையும் ரூ. 2,000 அபராதம் விதித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஒரு வாரம் சிறை தண்டனை விதிக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு அளித்தார். ஏற்கனவே வழங்கிய முந்தைய தீர்ப்பை 27ம் தேதிக்குள் அமல்படுத்தாவிட்டால் தண்டனை உத்தரவுகள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி உத்தரவை எதிர்த்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தது. இதில் ஒற்றை நீதிபதி வழங்கிய தேவஸ்தான ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுக்கு இன்று மதியம் 2 மணிக்கு டிவிஷன் பெஞ்ச் தடை விதித்தனர். இந்நிலையில் நாளை திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி மீதான ஒற்றை நீதிபதி வழங்கிய தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ