spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்மோடிக்கு கடிதம் போட்ட நடிகை கௌதமி... பெரும் பதவி வழங்கிய எடப்பாடி

மோடிக்கு கடிதம் போட்ட நடிகை கௌதமி… பெரும் பதவி வழங்கிய எடப்பாடி

-

- Advertisement -

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கௌதமி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளராக தடா பெரியசாமி, சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக ஃபாத்திமா அலி, விவசாய பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இருந்து நடிகை கவுதமி விலகினார். அதன்பிறகு அதிமுகவில் இணைந்தார். அதிமுகவுக்கும் கவுதமிக்கும் பல்வேறு தொடர்புகள் உள்ளன. கௌதமியின் திருமணத்தை நடத்தி வைத்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மரணம் குறித்து முதன் முதலில் சந்தேகம் கிளப்பியவர் கௌதமி. 1998ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் கவுதமி. கெளதமியின் திருமணம், ஜெயலலிதா தலைமையில் தான் நடைபெற்றது.

we-r-hiring

gowthami

திருமணமான அடுத்த ஆண்டே, அதாவது 1999ஆம் ஆண்டு கௌதமியும், சந்தீப் பாட்டியாவும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். பிறகு மகளுடன் வசித்து வந்தார் கௌதமி. அந்த காலகட்டத்தில் இருந்தே பாஜகவில் செயல்பட்டு வருகிறார் கௌதமி. பாஜகவில் இளைஞரணி தேசிய பொறுப்பையும் வகித்துள்ளார் கௌதமி.

நடிகை கவுதமி ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தெரிவித்து, பல்வேறு கேள்விகளை எழுப்பி, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போதே ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் கவுதமி.

லைப் அகைன் பவுண்டேசன் (Life Again Foundation LAF) என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கிய நடிகை கௌதமி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்து வருகிறார். அவர் தனது 35 வயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் நலம்பெற்றார். அதனாலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய அறக்கட்டளை தொடங்கினார். அவ்போது அறக்கட்டளை சார்பில் கேன்சர் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார்.

MUST READ