spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தவறாக பேசாதீங்க.. அடித்துச் சொன்ன அண்ணாமலை… அழாத குறயாக மறுக்கும் எடப்பாடியார்..!

தவறாக பேசாதீங்க.. அடித்துச் சொன்ன அண்ணாமலை… அழாத குறயாக மறுக்கும் எடப்பாடியார்..!

-

- Advertisement -

‘‘பாஜக-வுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள்’’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ‘‘அதிமுகவை அவர் குறிப்பிட்டாரா?’’ என எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி

கோவை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில், ‘‘பாஜக தீண்டத்தகாத கட்சி. நோட்டா கட்சி. பாஜக வந்ததால் தோற்றோம் என்றவர்கள் இன்று பாஜக வேண்டும் என தவம் இருக்கும் சூழ்நிலையை எங்கள் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் உருவாக்கி உள்ளது பெருமை அளிக்கிறது. பாஜக இல்லாமல் அரசியல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாகி உள்ளது. மற்றபடி எந்த கட்சியையும், தலைவரையும் குறைத்து பேசவில்லை’’என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

we-r-hiring

இந்நிலையில், இன்று (மார்ச் 08) ‘‘பாஜக-வுடன் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடக்கிறது” என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறியதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

annamalai eps

இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘எங்க அதிமுகவை குறிப்பிட்டாரா? தவறாக பேசாதீங்க, தயவு செய்து தவறாக பேசாதீங்க. எங்க அப்படி யார் சொன்னது. தவறாக நீங்க வந்து போட்டு கொடுத்து வாங்காதீங்க. ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

6 மாதம் கழித்து கூட்டணி குறித்து பேசப்படும் என்று தெளிவுபடுத்தி விட்டேன். பத்திரிகை, ஊடகங்களுக்கும் அதுதான் செய்தி’’இவ்வாறு அவர் பதில் அளித்தார். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் ‘ட்விஸ்ட்’ வைத்திருக்கிறார்.

 

MUST READ