தாராபுரம் வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு.. வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தம்! 
தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர் ஒருவர், குறிப்பிட்ட சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியதாக எழுந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தேர்தல் பணியில் இருந்த அலுவலர் ஒருவர் தவெக-வின் விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியதாக எதிர்க்கட்சியினர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அங்கு இருந்த எதிர்க்கட்சியினர் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
வாக்குச்சாவடியில் ஏற்பட்ட இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு தொடர்பாக தேர்தல் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகிய பின்னரே, சம்பவத்தின் முழுமையான விவரங்கள் தெரியவரும்.
