spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுமாநில முதலமைச்சர் கோப்பை நிகழ்ச்சி - உதயநிதி

மாநில முதலமைச்சர் கோப்பை நிகழ்ச்சி – உதயநிதி

-

- Advertisement -

மாநில முதலமைச்சர் கோப்பை நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன் தமிழ்நாடு சாம்பியன்ஸ் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.

இளைஞர் நலன், மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையில் மேற்கொள்ளும் வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செய்தியாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

மாநில முதலமைச்சர் கோப்பை நிகழ்ச்சி - உதயநிதி

we-r-hiring

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இதே போன்ற செய்தியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், மாநில முதமைச்சர் கோப்பை நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன் தமிழ்நாடு சம்பியன்ஸ் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார் என்றும் அதற்கான பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

மாநில முதலமைச்சர் கோப்பை நிகழ்ச்சி - உதயநிதி

இந்த திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனங்கள் அமைப்புகளின் நிதி பங்களிப்புடன் விளையாட்டு வீரர்களுக்கு அந்த நிதியை பயன்படுத்த இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் திட்டத்தின் தூதுவராக கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ