Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல்- சென்னையை வீழ்த்தி புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் முதலிடம்

ஐபிஎல்- சென்னையை வீழ்த்தி புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் முதலிடம்

-

- Advertisement -

ஐபிஎல்- சென்னையை வீழ்த்தி புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் முதலிடம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியல் முதல் இடத்தை பிடித்துள்ளது ராஜஸ்தான் ராயல் அணி.

Image

ஐ.பி.எல். தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 170 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது. இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் 5வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. எனவே புள்ளி பட்டியலிலும் 10 புள்ளிகள் பெற்று ராஜஸ்தான் ராயல் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகள் உடன் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

Image

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். துருவ் ஜூரல் 15 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். தேவ்தத் படிக்கல் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்தார். ஜாஸ் பட்லர் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சென்னை அணியில் ஷிவம் துபே அரை சதமடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ருதுராஜ் 47 ரன்னில் அவுட்டானார். மொயீன் அலி, ஜடேஜா தலா 23 ரன்கள் எடுத்தனர்.

MUST READ