Homeசெய்திகள்விளையாட்டு"அர்ஜென்டினாவுக்கு இனி நோ என்ட்ரி!" - இணையத்தையே உலுக்கிய 2.3 கோடி கையெழுத்துகள்... கலக்கத்தில் ரசிகர்கள்!

“அர்ஜென்டினாவுக்கு இனி நோ என்ட்ரி!” – இணையத்தையே உலுக்கிய 2.3 கோடி கையெழுத்துகள்… கலக்கத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

நடுவர்கள் ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு: உலக அளவில் அணிக்கு எதிரான கருத்து உருவாவதால் அர்ஜென்டினா மிரட்சி!"அர்ஜென்டினாவுக்கு இனி நோ என்ட்ரி!" - இணையத்தையே உலுக்கிய 2.3 கோடி கையெழுத்துகள்... கலக்கத்தில் ரசிகர்கள்!

ஃபீஃபா (FIFA) உலகக்கோப்பை தொடர்களில் அர்ஜென்டினா அணிக்கு ஆதரவாக நடுவர்கள் ஒருசார்பாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, அந்த அணியை உலகக்கோப்பையிலிருந்து நீக்க வேண்டும் எனத் தொடங்கப்பட்ட ஆன்லைன் மனுவில் இதுவரை 2.3 கோடிக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளது சர்வதேச கால்பந்து வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

‘அர்ஜென்டினா அவுட்’ ஆன்லைன் பிரச்சாரம்
அர்ஜென்டினா அணிக்கு எதிராகத் தொடங்கப்பட்ட [http://argentinaout.com](http://argentinaout.com) என்ற இணையதளப் பக்கத்தில், “ஃபீஃபா உலகக்கோப்பையில் இருந்து அர்ஜென்டினாவை நீக்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 50 லட்சம் கையெழுத்துகளைப் பெறுவதையே இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தப் பிரசாரம், குறுகிய காலத்தில் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, தற்போது 2.3 கோடிக்கும் அதிகமான கையொப்பங்களைப் பெற்று அர்ஜென்டினா அணியையே மிரள வைத்துள்ளது.

கின்னஸ் சாதனையை நெருங்கும் மனு
இணையவழியில் திரட்டப்பட்ட இந்த மெகா கையெழுத்து இயக்கம், உலக அளவிலான சாதனையை நெருங்கி வருகிறது. இதுவரை இணையத்தில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கங்களில் அதிகபட்சமாக 2.4 கோடி கையொப்பங்கள் பெற்றதே உலக சாதனையாக உள்ளது. ஆனால், அர்ஜென்டினாவுக்கு எதிரான இந்த மனு 2.3 கோடி கையெழுத்துகளைக் கடந்து, மிக விரைவிலேயே கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நிலையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதிகாரப்பூர்வ பாதிப்பு இல்லை; ஆனால் பின்னடைவு!
இந்த ஆன்லைன் கையெழுத்து இயக்கத்தின் காரணமாக அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையில் விளையாடுவதற்கோ அல்லது அதன் சாம்பியன் பட்டங்களுக்கோ நேரடியாக எந்தவிதப் சட்டப்பூர்வப் பிரச்சினையும், தடையோ ஏற்படப்போவதில்லை.  இருப்பினும், இத்தனை கோடி மக்கள் இதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது, உலக அளவில் அர்ஜென்டினா அணிக்கு எதிராகப் பெரும்பான்மையான ரசிகர்களின் கருத்து மற்றும் அதிருப்தி உருவாகியிருப்பதை வெளிப்படையாக உணர்த்துவதாகக் விளையாட்டுப் பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்: ரஹ்மத் ஷாவுக்குப் பொறுப்பு!

MUST READ