Homeசெய்திகள்விளையாட்டுசென்னை அணியை வீழ்த்தி 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது பெங்களூரு அணி!

சென்னை அணியை வீழ்த்தி 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது பெங்களூரு அணி!

-

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்றிரவு நடைபெற்ற 68வது லீக் போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய பெங்களூரு அணி 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 67 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 68வது லீக் போட்டி நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 68வது லீக் போட்டியில் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பெங்களூரு அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி 47 ரன்களிலும் பாப் டூ பிளசிஸ் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரஜத் படிதார் 41 ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் எதிர்த்து ஆடிய கேமரூன் 38 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது.

பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் சந்திந்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க மறுபுறம் எதிர்த்து ஆடிய ரச்சின் ரவீந்திரா 61 ரன்கள் ஆட்டமிழந்தார். டேரில் ,மிட்செல் 4 ரன்களிலும் அஜிங்கியா ரஹானே 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடி காட்டிய ரவீந்திர ஜடேஜா 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 191 ரன்கள் எடுத்து பின்னர் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் ஆட்டநாயகனாக பாப் டூ பிளசிஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு 4வது அணியாக தகுதி பெற்றது.

MUST READ