spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகார்பந்தய போட்டியில் பங்கேற்கும் நடிகர் அஜித்... துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

கார்பந்தய போட்டியில் பங்கேற்கும் நடிகர் அஜித்… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

-

- Advertisement -

துபாய் கார்பந்தய போட்டியில் பங்கேற்கும் நடிகர் அஜித்குமாருக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், உலகளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமார் அவர்களுக்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட_மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் – Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு தங்கள் அன்பும், நன்றியும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும், கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துவதாகவும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ