கோடிக்கணக்கில் கடன் வாங்கி ஏமாற்றியதாகப் புகார் — சட்டத்தின் பிடியில் சிக்கிய உரிமையாளர் மற்றும் மனைவி!
தமிழகத்தின் வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் இயங்கிவரும் முன்னணி ‘ஒற்றை எழுத்து’ வணிக நிறுவனம் ஒன்று, கோடிக்கணக்கில் கடனாகப் பெற்ற தொகையைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாகவும், அந்நிறுவனம் வழங்கிய காசோலைகள் (Cheque) அடுத்தடுத்து வங்கியில் பணமின்றி பவுன்சாகி உள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள இந்த அம்பலப்படுத்துதல்கள், வணிக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

கோடிக்கணக்கில் கடன்: வரிசையாக பவுன்சான காசோலைகள்!
மோகன் குமார் என்பவரிடம் ‘ஒற்றை எழுத்து’ வணிக நிறுவனம் மிகப்பெரிய அளவில் கோடிக்கணக்கில் கடன் வாங்கியுள்ளது. 5 மாதங்களுக்குள் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்து, தவணை முறையில் செலுத்த வழங்கப்பட்ட காசோலைகள் அனைத்தும் வங்கியில் பணமில்லாமல் அடுத்தடுத்துத் திரும்பி வந்துள்ளன (Cheque Bounce). முதலாவதாக வழங்கப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய்க்கான காசோலையும், அதைத் தொடர்ந்து கோடிக்கணக்கில் வழங்கப்பட்ட காசோலைகளும் அடுத்தடுத்துத் திரும்பியது அந்நிறுவனத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியைப் பச்சையாகக் காட்டியுள்ளது.
சட்டத்தின் பிடியில் உரிமையாளர் மற்றும் மனைவி!
தற்போது காசோலை மோசடி தொடர்பான சட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள் மூலமாக அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கும் அவரது மனைவிக்கும் அதிரடியாகச் சட்டப்பூர்வ அறிவிப்பு (Legal Notice) அனுப்பப்பட்டுள்ளது. புதிய சட்ட விதிகளின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தைச் செலுத்தத் தவறினால் சிறைவாசம் உறுதி என்ற சூழல் உருவாகியுள்ளது. ஏமாற்று வேலைகளையும் முறையற்ற நிதி முறைகேடுகளையும் நம்பி இயங்கிவந்த அந்நிறுவனத்தின் முகமூடி கிழிந்துள்ளதால், வர்த்தக உலகில் அதன் நற்பெயர் முற்றிலுமாகச் சரிந்து தூளினியாகியுள்ளது. பிரமாண்டமாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்த ஒரு வணிக சாம்ராஜ்யத்தின் உள்விவகாரங்கள் இவ்வாறு நீதிமன்றப் படியேறும் நிலைக்கு வந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
