“மகள்தான் என் உயிர்…” – இந்த வாசகத்தை உணர்வுப்பூர்வமாக நிரூபிக்கும் வகையில், துபாயில் வசிக்கும் தந்தை ஒருவர், பள்ளிக்குச் செல்லும் தனது மகளுக்காக செய்த நெகிழ்ச்சி சம்பவம் இணையவாசிகளின் இதயங்களை வென்று வருகிறது.
முதல் நாள் பள்ளிப் பயணம்
குழந்தைகள் முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் நாள் என்பது ஒவ்வொரு பெற்றோருக்குமே மறக்க முடியாத தருணமாகும். அந்த நாளைத் தனது மகளின் வாழ்நாள் நினைவாக மாற்ற விரூபிய தந்தை, அதற்காகத் தேர்வு செய்த வழி தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாறிய சொகுசு கார்
தனது மகள் ‘தஹப்’ மீது கொண்ட அளவற்ற பாசத்தின் காரணமாக, தனது விலையுயர்ந்த சொகுசு காரை அப்படியே ஒரு மஞ்சள் நிற ‘ஸ்கூல் வேன்’ போல உருமாற்றியுள்ளார். காரின் வெளிப்புறத்தில் பள்ளி வாகனங்களில் இருப்பது போன்ற வண்ணங்களை அடித்து, ராட்சத அலங்கார உபகரணங்களை அமைத்து, காரின் முகப்பிலும் பக்கவாட்டிலும் மகளின் பெயரையே பெரிய எழுத்துக்களில் ஸ்டிக்கராக ஒட்டியுள்ளார்.
இணையத்தில் வைரல்
மகள் தஹப், தந்தை அன்போடு தயார் செய்த இந்தச் சிறப்பு காரில் புன்னகையோடு பள்ளிக்குச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. “தந்தையின் பாசத்திற்கு எல்லை இல்லை” என்றும், “அந்தச் சிறுமி கொடுத்து வைத்தவர்” என்றும் உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு, அந்தத் தந்தையின் நெகிழ்ச்சியான செயலைப் பாராட்டி வருகின்றனர்.
ஆசிரியர் தினம் இன்று கொண்டாட்டம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
