spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநவம்பர் மாதத்தில் ரூ.1,984 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை!

நவம்பர் மாதத்தில் ரூ.1,984 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை!

-

- Advertisement -

பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,984 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Moorthy

we-r-hiring

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கிய துறையாக விளங்கிவரும் பதிவுத்துறையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆயிரத்து 984 கோடிய 2 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த வருடம் நவம்பர் மாதம் அடைந்த வருவாயினை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த நவம்பர் 2024-ஆம் மாதத்தில் கூடுதலாக 301 கோடியே 87 லட்சம வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

tamilnadu assembly

மேலும் நேற்று கார்த்திகை மாத சுப முகூர்த்த நாளில் ஆவணங்கள் அதிகளவில் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் என்பதால் சிறப்பு நிகழ்வாக பொதுமக்கள் பயன் பெறும் வகையில் முன்பதிவு வில்லைகள் 100 லிருந்து 150 ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி பொது மக்கள் உயர்த்தப்பட்ட முன் ஆவணப்பதிவு வில்லைகளை பயன்படுத்தி கடந்த நேற்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு 238  கோடியே 15 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ