தமிழ்நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உயர்த்தப்பட்டு, 2026-27ஆம் நிதியாண்டுக்காக ரூ.828.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வீதம், மொத்தம் 234 தொகுதிகளுக்கும் சேர்த்து ரூ.702 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.
ஜிஎஸ்டி (GST) செலவை ஏற்கும் மாநில அரசு!
சட்டப்பேரவை உறுப்பினர்களால் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி செலவையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் அரசுக்குப் பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையைப் பரிசீலனை செய்து, ஊரக வளர்ச்சித் துறை செயலர் பிரசாந்த் மு.வடநெரே புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார்.
புதிய அரசாணையின் முக்கிய விவரங்கள்:
தொகுதி நிதி உயர்வு: எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டுக்கான மொத்த ஒதுக்கீடு தலா ரூ.3.54 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மொத்த நிதி ஒதுக்கீடு: மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் சேர்த்து 2026-27-ம் ஆண்டுக்கு மொத்தம் ரூ.828.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதை விடுவிப்பதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி: இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியைத் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் புதிய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முந்தைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு நிதியைச் செலவிடக் கூடாது.
மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம்: ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையைப் பெற்று, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் விடுவிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.
அதிகரித்துக் கொண்டே செல்லும் மின்கட்டணம்: வீடியோ வெளியிட்டு பிரபல நடிகை வைஷாலி ஆதங்கம்!
