தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஜெம் வீரமணி மீதான போக்சோ மற்றும் குற்ற வழக்கு விவகாரத்தில் தினமும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்தகைய வழக்கில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கைள் தற்போது தீவிரமடைந்துள்ளதாக ‘மின்னம்பலம்’ டிஜிட்டல் தின்னை செய்திகள் வெளியிடுகின்றன.
காவல்துறையில் அதிரடி இடமாற்றங்களும், சிறப்புப் புலனாய்வு குழுவும்
ஜெம் வீரமணி விவகாரத்தில் தொடக்கக் கட்டத்தில் விசாரணை நடத்திய விபச்சார தடுப்புப் பிரிவு உதவி கமிஷனர் யாஸ்மின், ஆய்வாளர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமி ஆகியோருக்குச் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. மேலும், முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் மற்றும் அப்போதைய உதவி கமிஷனராக இருந்த கண்ணன் உள்ளிட்டோர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கை விசாரிக்கத் தருமிகத் திறமையான பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது:
கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி ஐ.பி.எஸ்.
இணை காவல் ஆணையர் திஷா மிட்டில் ஐ.பி.எஸ்.
ஊடகத் தொடர்பு அலுவலர் முத்தரசி ஐ.பி.எஸ்.
துணை காவல்துறை அலுவலர் கீதாஞ்சலி
பணப் பரிமாற்றங்களும், வெளிநாடு தப்பியோட முயன்ற பிரமுகர்களும்
ஜெம் வீரமணியின் வலது கரமாகச் செயல்பட்ட கணேசனின் கணக்குகளைப் பரிசோதித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கணேசனின் கணக்குகள் மூலமாகச் சில காவல்துறை அதிகாரிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பணம் கைமாறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செட்டில்மென்ட் வேலைகளில் முக்கியப் பங்காற்றிய பிரகாஷ் (அகில இந்திய ரயில்வே சம்மேளனத் தலைவர் கண்ணையாவின் மகன்) வெளிநாட்டிற்குத் தப்பியோடியுள்ள நிலையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறையில் புலம்பும் ஜெம் வீரமணி
”வழக்கிலிருந்து தப்பவைத்து விடுவதாகக் கூறி தன்னிடம் பலரும் பெருமளவில் பணம் பெற்றுக் கொண்டனர்; ஆனால் யாரும் காப்பாற்றவில்லை” என்று ஜெம் வீரமணி சிறையில் வாடன்களிடம் புலம்பி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மீடியா செலவுகளுக்குப் பணம் கொடுக்கலாம் என்ற யோசனைக்கு, கொடுத்த வரை போதும், இனி நடப்பது நடக்கட்டும் என்று அவர் விரக்தியில் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சி.பி.ஐ. விசாரணைக்கு வாய்ப்பு?
குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய கொடூரக் குற்ற வழக்கு விசாரணையை மாநிலக் காவல்துறையே விசாரிப்பதில் சிக்கல் இருப்பதால், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு முன்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மாநில அரசும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மூலமாகச் சிறப்பு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதால், இவ்வழக்கின் அடுத்தடுத்த நகர்வுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
தேவதாசி முறை நியாயப்படுத்தப்படுகிறதா? – ஜெயமோகனின் கருத்துக்களும், பெரியார் திடலில் நடந்த விவாதமும்!
