தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு பழைய பேருந்துகளுக்குப் பதிலாக 1000 புதிய பேருந்து வாங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் 19.10.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவித்தார்.அதன் படி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து நிறுவனங்களில் மொத்தம் 20,257 பேருந்துகள் உள்ளன.ஒரு பேருந்தின் சராசரி இயக்க காலம் 7.65 ஆண்டுகளாக உள்ளது.மொத்தப் பேருந்துகளில், 9,253 பேருந்துகள், 46% அரசு நிர்ணயித்த விதிமுறைகளின்படி பழைய பேருந்துகளாக இருப்பதால், அதற்குப் பதிலாக புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளது.அதன் படி BS-VI வகை டீசல் பேருந்துகள் வாங்கப்பட உள்ளது.

இதன் படி ஆறு கோட்டங்களுக்கு முறையே,
1.விழுப்புரம் கோட்டம் (180)
2.சேலம் கோட்டம்(100)
3.கோவை கோட்டம்(120)
4.கும்பகோணம் (250)
5.மதுரை கோட்டம் (220)
6.திருநெல்வேலி (130)
என பேருந்துகள் ஒதுக்கப்படும்.
ஒரு பேருந்து 42 இலட்சம் என்ற மதிப்பீட்டில் மொத்தம் 1000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. இதில் 60 சதவீதம் நகரப் பேருந்துகளும் 40 சதவீதம் தொலைதூரம் செல்லும் பேருந்துகளாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
