Homeசெய்திகள்உலகம்இஸ்ரேல்- ஹமாஸ் தாக்குதல்: 4,000- ஐ தாண்டிய உயிரிழப்பு!

இஸ்ரேல்- ஹமாஸ் தாக்குதல்: 4,000- ஐ தாண்டிய உயிரிழப்பு!

-

- Advertisement -

 

இஸ்ரேல்- ஹமாஸ் தாக்குதல்: 4,000- ஐ தாண்டிய உயிரிழப்பு!
File Photo

இஸ்ரேல்- ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,000- ஐ தாண்டியுள்ளது. இந்த போரில் இதுவரை 13,000- க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சைக்காகக் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. காசாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பியுள்ளனர். போரில் காயமடைந்தவர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினர், முதலுதவி சிகிச்சைப் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை சாலை விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

காசா நகரில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் மட்டும் 2,215 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 8,714 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருவதாக பாலஸ்தீன அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதேபோல், ஹமாஸ் நடத்தி வரும் தாக்குதலில் 1,300 யூதர்கள் கொலைச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஆறு நாட்களில் காசா மீது 6,000 குண்டுகளை இஸ்ரேல் வீசியுள்ளது. தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், காசாவில் இருந்து வெளியேற இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

பாலஸ்தீன மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் அமைப்பினர் தடுத்து நிறுத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. காசா- எகிப்து எல்லையான ராஃபாவில் இருந்து வெளியேற பல கிலோ மீட்டர் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்.

கொடிவேரி அணையில் பரிசல் இயக்கத் தடை!

இதனிடையே, எல்லையில் இஸ்ரேல் தரைப்படை வீரர்கள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக, ஐ.நா.வில் வாக்கெடுப்பு நடத்த ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

MUST READ