Homeசெய்திகள்உலகம்7 நாளில் சரணடைந்த வல்லரசு அமெரிக்கா! - ஈரானின் இரும்புத் தாக்குதலில் மண்டியிட்டு ஓடும் டொனால்ட்...

7 நாளில் சரணடைந்த வல்லரசு அமெரிக்கா! – ஈரானின் இரும்புத் தாக்குதலில் மண்டியிட்டு ஓடும் டொனால்ட் ட்ரம்பின் கோழைத்தனமான நாடகம்!

-

- Advertisement -

சர்வதேச அரங்கு:உலகை மிரட்டி வந்த அமெரிக்க வல்லரசை வெறும் ஏழே நாட்களில் மண்டியிட வைத்துள்ளது ஈரான். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தொடுத்துள்ள சிதறடிக்கும் வியூகப் போர், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார அரங்கில் மாபெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.7 நாளில் சரணடைந்த வல்லரசு அமெரிக்கா! - ஈரானின் இரும்புத் தாக்குதலில் மண்டியிட்டு ஓடும் டொனால்ட் ட்ரம்பின் கோழைத்தனமான நாடகம்!

“பல்டி அடிக்கும் ட்ரம்ப் – ஈரான் காலில் விழுந்ததா அல்லது அமெரிக்கா நடுங்கியதா?”
ஈரான் மீது வெறித்தனமான தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீரென அந்தத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தாழ்ந்துபோய் அறிவித்துள்ளார். ஈரான் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்குக் கெஞ்சி அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஹோர்முஸ் ஜலசந்தியை எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றித் திறக்க அவர்கள் சம்மதித்துள்ளதாகவும் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மார்தட்டிக் கொண்டுள்ளார்.

we-r-hiring

ஆனால், ட்ரம்ப் கூவுவது போல் ஈரான் பயந்துபோய் சரணடையவில்லை; மாறாக, ஈரானின் ஓயாத அடிதாக்கலில் அமெரிக்காவின் ஆயுதக் கிடங்குகள் காலிட்டுக் கிடப்பதால், மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வழியின்றி ட்ரம்ப்தான் நைசாகப் பின்வாங்கியுள்ளார் என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துத் தள்ளுகின்றனர். முன்னதாக, “ஈரான் எவ்வளவுதான் அடி வாங்கினாலும் பின்வாங்காமல் திருப்பி அடிக்கிறது, என்னால் என்ன செய்ய முடியும்?” என்று ட்ரம்ப் பரிதாபமாக ஒப்புக்கொண்டதே இதற்குச் சாுடாகும்.

7 நாளில் சரணடைந்த வல்லரசு அமெரிக்கா! - ஈரானின் இரும்புத் தாக்குதலில் மண்டியிட்டு ஓடும் டொனால்ட் ட்ரம்பின் கோழைத்தனமான நாடகம்!

“மலிவு விலை ட்ரோன்களால் சுருண்ட அமெரிக்காவின் பல்லாயிரம்கோடி ராணுவம்!”
இந்தப் போரின் ஆரம்பத்தில் கூட்டாக இணைந்து ஈரான் மீது குண்டுமழை பொழிந்த அமெரிக்காவும் இஸ்ரேலும், தற்போது ஈரானின் அசாத்தியமான தற்காப்புத் தாக்குதலால் நிலைகுலைந்து போய் கிடக்கின்றன. மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் ஈரானிய ஆளில்லா ட்ரோன்களை (Drones) அழிப்பதற்காக, அமெரிக்கா கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள அதிநவீன ‘பாட்ரியாட்’ ஏவுகணைத் தற்காப்பு அமைப்புகளைக் கண்மூடித்தனமாகச் செலவழித்துத் தீர்த்துள்ளது.

இதன் விளைவாக, அமெரிக்காவின் ராணுவக் கிடங்குகள் முற்றிலுமாகச் சோர்ந்துவிட்டதாக பென்டகன் வட்டாரங்களே பகிரங்கமாக அஞ்சுகின்றன. ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளபதி ஜெரல் அலெக்சஸ் கிளீன்விக்ஸ், தலைமையகத்திற்கு எழுதியுள்ள இரகசியக் கடிதத்தில், இஸ்ரேலைத் தற்காக்கும் அளவுக்குத் தங்களிடம் தற்போது ஆயுதங்கள் இல்லை என்றும், நிலைமை நீடித்தால் இஸ்ரேலைத் கைவிட நேரிடும் என்றும் எச்சரித்துள்ளதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட்டுள்ள பகீர் செய்தி உலக வல்லரசைத் தலைகுனிய வைத்துள்ளது.7 நாளில் சரணடைந்த வல்லரசு அமெரிக்கா! - ஈரானின் இரும்புத் தாக்குதலில் மண்டியிட்டு ஓடும் டொனால்ட் ட்ரம்பின் கோழைத்தனமான நாடகம்!

“ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம் – வளைகுடா நாடுகளின் காலில் விழும் அமெரிக்கா!”
மத்திய கிழக்கில் கொழுந்துவிட்டு எரியும் இந்தப் போரினால், உலகின் மிக முக்கிய எண்ணெய் நாடித்துடிப்பான ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தங்களது எண்ணெய் ஏற்றுமதியை மேற்கொள்ள முடியாமல் தவித்து, போரை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்காவின் மீது கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன. எகிப்து எல்லை வரை போர் பரவியுள்ள நிலையில், சவுதியின் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் போட்டுள்ள இரும்புத் தடையை மீற முடியாமல் அமெரிக்கா விழிபிதுங்கி நிற்கிறது.

“அமெரிக்காவின் வீழ்ச்சியும் ஈரானின் கம்பீரமும்!”
ஈரானைப் பொறுத்தவரை, தங்களது பலம் உச்சத்தில் இருக்கும் பொழுதே காய்களை நகர்த்துவதில் தெளிவாக உள்ளது. அமெரிக்காவின் ஆயுதத் தற்காப்பும், பொருளாதாரப் பலமும் நொறுங்கிப்போகும் வரை ஈரான் தனது அதிரடியைக் கைவிடாது என்பது உறுதியாகியுள்ளது. டரம்ப் தரப்பு தனது வழக்கமான மலிவான ‘வெற்றி’ நாடகங்களை அரங்கேற்றினாலும், நிதர்சனத்தில் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள படுதோல்வியும் ராணுவப் பற்றாக்குறையும் உலக அரங்கில் அதன் சாம்ராஜ்யத்தின் இறுதி அத்தியாயம் தொடங்கிவிட்டதையே பறைசாற்றுகின்றன.

மத்திய கிழக்கு களத்தில் பெரும் திருப்பம்: அமெரிக்காவின் ராணுவ மற்றும் தொழில்நுட்பத் தளங்களை ஈரானியப் புரட்சிப் படை முற்றிலுமாகத் தகர்த்ததாகப் பேட்டி!

MUST READ