Homeசெய்திகள்உலகம்ஈரான் போரால் காலியான அமெரிக்க ஆயுதக் கிடங்கு... பென்டகன் போட்ட 'அவசர' உத்தரவு!

ஈரான் போரால் காலியான அமெரிக்க ஆயுதக் கிடங்கு… பென்டகன் போட்ட ‘அவசர’ உத்தரவு!

-

- Advertisement -

ஈரானுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் தீவிரப் போர் காரணமாகத் அமெரிக்கப் படைகளிடம் ஆயுதங்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையைச் சமாளிக்கும் பொருட்டு, ஆயுத உற்பத்தியைப் பலமடங்கு உயர்த்துமாறு அமெரிக்கப் பாதுகாப்புச் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்குப் பென்டகன் (Pentagon) அதிரடி உத்தரவிட்டுள்ளது.ஈரான் போரால் காலியான அமெரிக்க ஆயுதக் கிடங்கு... பென்டகன் போட்ட 'அவசர' உத்தரவு!

ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் மற்றும் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளால், முன்னணி ஏவுகணைகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களின் கையிருப்பு வேகமாகச் சரிந்து வருகிறது. இதனால் அமெரிக்க ராணுவத்தின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

21 நாட்களுக்குள் திட்டம் சமர்ப்பிக்கக் கெடு
இந்த விநியோகச் சங்கிலி நெருக்கடியைச் சரிசெய்ய அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் முன்னணிப் பாதுகாப்புச் சாதனத் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பென்டகன் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

  • உற்பத்தியைப் பெருக்குதல்: தற்போதைய அவசர நிலையைக் கருத்தில் கொண்டு ஆயுதங்களின் உற்பத்தியை உடனடியாக பலமடங்கு அதிகரிக்க வேண்டும்.
  • விரைவு விநியோகம்: தயாரிக்கப்படும் ஆயுதங்களை ராணுவத்திற்கு விரைவாக விநியோகம் செய்வதற்கான மாற்று திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • முழுமையான திட்ட அறிக்கை: ஆயுத உற்பத்தியைப் பெருக்குவது மற்றும் விநியோகத்தை வேகப்படுத்துவது தொடர்பான விரிவான செயல் திட்டங்களை 21 நாட்களுக்குள் பென்டகனிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

உலக அரங்கில் அதிகரிக்கும் பதற்றம்
அமெரிக்கா தனது ஆயுதக் கையிருப்பை அதிகரிக்க இத்தகைய அவசர முடிவை எடுத்துள்ளது, ஈரானுடனான போர் மேலும் தீவிரமடையும் என்பதையே காட்டுவதாக சர்வதேச ராணுவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பென்டகனின் இந்த அதிரடி நடவடிக்கை உலக நாடுகளிடையே பெரும் பரப்பரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய நாடுகளின் பாதுகாப்பிற்கு ‘நேட்டோ’ பாணியிலான புதிய கூட்டணி: சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் வரலாற்று ஒப்பந்தம்!

MUST READ