2023-ல் வசூல் சாதனை படைத்த டாப் 10 தமிழ்த் திரைப்படங்கள்!
10: போர் தொழில்
அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் மிரட்டலான சைக்கோ திரில்லர் படமாக வெளிவந்த இப்படம் 50 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
9. மாமன்னன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் அரசியலில் தீண்டாமையின் ஆதிக்கத்தை விவரித்து மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்திருந்த இப்படம் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
8. மாவீரன்
சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு ஆகியோரின் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் பேண்டஸி படமாக வெளியான இப்படம் 90 கோடி ரூபாய் வசூலித்தது.
7. மார்க் ஆண்டனி
விஷால் ஒருபுறம் மாஸ் காட்சிகளில் கலக்க, எஸ் ஜே சூர்யா காமெடி கலந்த வில்லத்தனத்தை அசுரத்தனமாக வெளிப்படுத்திய இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். 110 கோடி ரூபாயை வசூலித்து இந்த ஆண்டின் மாபெரும் வெற்றி படங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது மார்க் ஆண்டனி.
6. வாத்தி
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த இப்படம் ஒரு தலைமுறையை முன்னேற்ற கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை கமர்சியலாக எடுத்துக் கூறி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆபிஸில் 118 கோடியை இப்படம் வசூலித்தது.
6. துணிவு
அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கியிருந்த”துணிவு” பொங்கல் விடுமுறையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் 250 கோடியை வசூலித்து அசால்ட் செய்திருந்தது.
4. வாரிசு
விஜய் நடிப்பில் உருவான “வாரிசு” துணிவு படத்துடன் பொங்கல் விடுமுறையில் ரிலீஸானது. வம்சி இயக்கத்தில் உருவான இப்படம் 310 கோடியை வசூலித்து சம்பவம் செய்தது.
3. பொன்னியின் செல்வன்-2
மணிரத்தினம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 345 கோடிகளை அள்ளியது. முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பின் அலையால் இரண்டாம் பாகம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
2. ஜெயிலர்நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023 ஆகஸ்டில் வெளியாகி 607 கோடியை வசூலித்து வரலாற்றுச் சாதனை படைத்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் யாருமே எதிர்பார்த்திராத அளவுக்கு இமாலய வெற்றியை பெற்றது.

1. லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை சூறாவளியாய் புரட்டிப்போட்டு வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது “லியோ“. அக்டோபர் மாதம் ரிலீஸான இப்படம் ஜெயிலர் படத்தை முந்தி 620 கோடிக்கு மேல் வசூல் செய்து 2023ம் ஆண்டின் இண்டஸ்ட்ரி ஹிட் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளது.