- Advertisement -
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என திரையரங்குகளில் கோலாகலமாக திரைப்படங்களை பார்த்து ரசித்த ரசிகர்களின் கவனத்தை, கொரோனா காலத்தில் தன் பக்கம் திருப்பியது ஓடிடி தளங்கள். திரையரங்குகள் அனைத்து அடைத்துவைக்கப்பட்ட போது, மக்களின் நேரத்தை கழிக்க உதவிய நிறுவனங்கள் ஓடிடி தளங்கள். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், ஜீ5 என பல தரப்பட்ட தளங்களில் பல தரப்பட்ட திரைப்படங்களையும், இணைய தொடர்களையும் கண்டு ரசிக்க தொடங்கினர் மக்கள். ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப திரையுலகினரும் பல திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டனர். சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமன்றி முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பெரிய பட்ஜெட் திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் வந்திறங்கின. அந்த வகையில் 2023-ம் ஆண்டில் நேரடியாக ஓடிடி தளத்தில் வௌியாகி மக்கள் மனதை வென்ற திரைப்படங்களையும், இணைய தொடர்களையும் இந்த செய்தியில் விரிவாக காண்போம்….
அயலி …
இயக்குநர் முத்துமார் இயக்கத்தில் அபி நக்ஷத்ரா, அனுமோல், மதன், லிங்கா, சிங்கம்புலி, ஆகியோர் நடிப்பில் ஜனவரி 26-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான தொடர் அயலி. வீரப்பண்ணையிலிருந்து தமிழ்ச்செல்வியாக அறிமுகமான அபி நக்ஷத்ரா ஒடுக்குதல், ஆணாதிக்கத்திற்கு நடுவே கனவை துரத்தும் அயலியாக ரசிகர்கள் கண்களில் ஜொலித்தார். வழக்கமான இணைய தொடராக இல்லாமல், சற்றே விலகி நின்று அனைத்து பெண்களின் மனதிலும் இடம் பிடித்தது அயலி தொடர்.
தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்…..
