HomeRewind 2023#Rewind2023: 2023-ல் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த அறிமுக இயக்குனர்கள்... ஓர் அலசல்!

#Rewind2023: 2023-ல் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த அறிமுக இயக்குனர்கள்… ஓர் அலசல்!

-

- Advertisement -

நாம் பல இடங்களில் காலத்தால் அழியாத பழங்காலச் சிற்பங்களைப் பார்த்து வியந்திருப்போம். ஆனால் அதனை நுட்பமாகச் செதுக்கிய சிற்பியின் பெயர் கூட நமக்குத் தெரியாமல் போயிருக்கும். அதுபோல காலத்தால் அழியாத பல திரைப்படங்கள் நம் மனதில் நிலைத்திருக்கும், ஆனால் அப்படங்களை இயக்கிய இயக்குனர்களின் பெயர்களில் ஒரு சில மட்டுமே நம் நினைவில் இருக்கும். அதன்படி பல புதுமுக இயக்குனர்களின் முதல் படமே மாஸ்டர்பீஸ் படங்களாக அமைவதுமுண்டு.ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ஐடியாக்களோடு களம் இறங்கி அடுத்த தலைமுறை சினிமாவிற்கு நம்மை அழைத்துச் செல்லும் இயக்குனர்களை உருவாக்குகிறது சினிமா. இத்தகைய சினிமாவில் 2023ஆம் ஆண்டில் தங்களுடைய முத்திரையைப் பதித்துள்ள புதுமுக இயக்குனர்கள் பற்றிய ஒரு பார்வை.2023-ல் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த அறிமுக இயக்குனர்கள்... ஓர் அலசல்!

இயக்குனர் மந்திரமூர்த்தி

சசிகுமார் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஃபீல் குட் திரைப்படமான “அயோத்தி”படத்தின் இயக்குனர் இவரே. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து தனி முத்திரையைப் பதித்திருந்தார் மந்திரமூர்த்தி.

இயக்குனர் கணேஷ்.கே. பாபு

கவின்,அபர்ணாதாஸ் நடிப்பில் வெளிவந்த பிளாக்பஸ்டர் ஹிட் படம் “டாடா“. தன்னுடைய முதல் படத்திலேயே இளைஞர்களின் நாடித்துடிப்பை அறிந்து, அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து சிறப்பான படைப்பாக “டாடா” படத்தை கொடுத்திருந்தார் கணேஷ்.கே.பாபு

இயக்குனர் விக்னேஷ் ராஜா

சிறு சிறு குறும்படங்களை இயக்கி பின்னர் வெள்ளித் திரையில் நுழைந்தவர் விக்னேஷ் ராஜா.”போர்த் தொழில்” என்ற ஒற்றை படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் சிவப்பு கம்பள வரவேற்பைப் பெற்றுள்ளார். அசோக் செல்வன், சரத்குமார் கூட்டணியில் வெளியான “போர்த் தொழில்“படத்தை காண வந்த ரசிகர்களை பரபரப்பான திரைக்கதையின் மூலம் சீட்டின் நுனியில் அமர வைத்திருந்தார். அந்த வகையில் க்ரைம் திரில்லர் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தை படைத்திருந்தார் விக்னேஷ் ராஜா.2023-ல் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த அறிமுக இயக்குனர்கள்... ஓர் அலசல்!

இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்

பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் இருக்கும்”குறட்டை”பிரச்சனையை மையமாகக் கொண்டு அருமையான ஃபீல்குட் படமாக “குட் நைட்” படத்தை இயக்கி இளைஞர்களை கவர்ந்திருந்தார் விநாயக் சந்திரசேகரன். மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் போன்ற கதாபாத்திரங்களை நமது பக்கத்து வீட்டுக்காரர்களாக ரசிக்கும்படி அவர்களிடமிருந்து எதார்த்தமான நடிப்பை வெளிக்கொண்டு வந்திருந்தார் விநாயக் சந்திரசேகரன்.

இயக்குனர் தரணி ராஜேந்திரன்

தமிழரின் பெருமை என்றாலே சோழ வம்சத்தை முன்னிறுத்தி வந்த படைப்புகளின் மத்தியில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியரின் பக்கம் நின்று வெளிவந்த திரைப்படம் “யாத்திசை”. குறைவான பட்ஜெட்டில் தரமான பீரியாடிக் படமாக இதனை இயக்கி வெற்றி கண்டார் இயக்குனர் தரணி ராஜேந்திரன்.2023-ல் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த அறிமுக இயக்குனர்கள்... ஓர் அலசல்!

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்

கார் நிறுத்தும் பார்க்கிங் பிரச்சனையால் இருவருக்குள் ஏற்படும் ஈகோ, எவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறுகிறது என்பதை விறுவிறுப்பான த்ரில்லர் கதையாக விருந்து படைத்தவர் அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். 2023-ல் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த அறிமுக இயக்குனர்கள்... ஓர் அலசல்!ஹரிஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த “பார்க்கிங்” படத்தின் இயக்குனர் தான் இவர். முதல் படம் போல இல்லாமல் ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குனர் போல இப்படத்தை நேர்த்தியாக இயக்கியிருந்தார்.

இயக்குனர் ஹரிஹரன் ராம்

நீண்ட வருடங்களுக்குப் பிறகு முழுக்க முழுக்க அழகான ஒரு காதல் கதையாக வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த திரைப்படம் “ஜோ”. ரியோ ராஜ், பாவியா த்ரிகா ஆகியோரை திரையில் காண்பிக்கும் பொழுது பலருடைய கல்லூரி வாழ்க்கையைக் கண்முன்னே நிழலாடச் செய்திருந்தார் இயக்குனர் ஹரிஹரன் ராம்.2023-ல் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த அறிமுக இயக்குனர்கள்... ஓர் அலசல்! உணர்ச்சிப்பூர்வமான காதல் கதையில் ரசிகர்களை கண்கலங்க வைத்து இன்றுவரையிலும் மீள முடியாமல் வைத்திருக்கிறது ஜோ என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ