spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா' என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல'.... விமர்சனங்களுக்கு பதிலடி...

‘ என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல’…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்!

-

- Advertisement -

' என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல'.... விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்!கர்ணன், பரியேறும், மாமன்னன் பெருமாள் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் அடுத்ததாக துருவ் விக்ரம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்டத்தின் மாவட்டங்களில் கன மழையினால் வெள்ளம் சூழ்ந்து அதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தமிழக அரசு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.' என் கலையும் கடமையும்  நான் யார் என்று நிரூபிப்பது அல்ல'.... விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்!

we-r-hiring

அதேசமயம் சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்த சமயங்களில் இயக்குனர் மாரி செல்வராஜூம் அவருடன் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார். அதுமட்டுமில்லாமல் தனது சமூக வலைதள பக்கத்தில் வரலாறு காணாத பேரிடரில் இருந்து மக்களை விரைவாக மீட்டெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.

அதே நேரத்தில் தனது சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், உதவி தேடுபவர்கள் பாதிப்பில் இருந்து மீட்டெடுக்கப்பட்டவர்கள் போன்ற விபரங்களை தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வந்தார். மாரி செல்வராஜின் இந்த செயல் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் அமைச்சருடன் மாறி செல்வராஜுக்கு என்ன வேலை என்பது போன்ற கேள்விகளை எழுப்பி விமர்சித்து வந்தனர். இது போன்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல…. நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ