spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்த 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

இந்த 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

-

- Advertisement -

Rain

இந்த 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 19.07.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பில் தெரிவித்திருந்தது.

கனமழைக்கு வாய்ப்பு

இந்நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிருஷ்ணகிரி,திருப்பத்தூர். தர்மபுரி, சேலம். கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர். கன்னியாகுமரி, நெல்லை தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை. புதுச்சேரியிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ