spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபொன்னியின் செல்வன் படத்தின் புதிய காணொலி

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய காணொலி

-

- Advertisement -

கவனம் ஈர்க்கும் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய காணொலி

பொன்னியின் செல்வன் படக்குழுவினர், புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இரண்டு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 2 பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வனில், ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

we-r-hiring

 

ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை

கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

புதிய வீடியோ வெளியிட்டது படக்குழு

முதல் பாகத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே, தொழில்நுட்ப பணிகளை முடிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் வெளியீட்டை தள்ளிவைப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில், படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு உறுதி செய்துள்ளது. அதனுடன், பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் குறித்து, அதன் நடிகர்கள் பேசும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

MUST READ