- Advertisement -
தமிழகத்தில் பொறியியல் படிப்பு துணைக் கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் தொடங்குகின்றன. 12ம் வகுப்பு பொது, தொழிற்கல்வி பயின்று சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் – 4 கடைசி நாளாகும்.
ஓசி, ஓபிசி, எம்.பி.சி மாணவர்களுக்கான பதிவு கட்டணம் 500 ரூபாயும் எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ் சி ஏ மாணவர்களுக்கான பதிவு கட்டணம் 250 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கலந்தாய்வு விவரங்கள் மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் www.tneaonline.org, www.dte.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.