spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசரவெடியாய் வெடிக்கும் கோட் படத்தின் ரிலீஸ் ப்ரோமோ.... இணையத்தில் வைரல்!

சரவெடியாய் வெடிக்கும் கோட் படத்தின் ரிலீஸ் ப்ரோமோ…. இணையத்தில் வைரல்!

-

- Advertisement -

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் நாளை (செப்டம்பர் 5) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட 5000க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படும் கோட் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல ரசிகர்கள் நாளை கோட் திரைப்படத்தை காண மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படக்குழு கோட் படத்தின் ரிலீஸ் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. சரவெடியாய் வெடிக்கும் இந்த ப்ரோமோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். படத்தில் நடிகர் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியும் நடித்துள்ளனர். சரவெடியாய் வெடிக்கும் கோட் படத்தின் ரிலீஸ் ப்ரோமோ.... இணையத்தில் வைரல்!மேலும் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மைக் மோகன் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இவ்வாறு எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் காண்பிக்கப்பட உள்ளார். ஆகையினால் நாளை திரையரங்கமே அதிர போகிறது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

we-r-hiring

 

MUST READ