spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎல்சியு -வில் இணைந்த லாரன்ஸ்.... அதிகாரப்பூர்வமாக அறிவித்த லோகேஷ்!

எல்சியு -வில் இணைந்த லாரன்ஸ்…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த லோகேஷ்!

-

- Advertisement -

நடிகர் ராகவா லாரன்ஸ் எல்சியு வில் இணைந்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.எல்சியு -வில் இணைந்த லாரன்ஸ்.... அதிகாரப்பூர்வமாக அறிவித்த லோகேஷ்!

லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அடுத்தது இவர் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி ஏற்கனவே பைட் கிளப் எனும் திரைப்படத்தை தயாரித்திருந்தார். அதை கடந்து ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள பென்ஸ் எனும் திரைப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இவருடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தி ரூட் நிறுவனமும் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தினை பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, பகத், ஃபாசில் ஆகியோர் நடிக்கப் போகிறார்கள் என்று தகவல்கள் கசிந்து வருகிறது.

we-r-hiring

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 29) நடிகர் ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ், பென்ஸ் படம் தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்திருந்தார். அந்த வீடியோவில், வெல்கம் டு மை யுனிவர்ஸ் மாஸ்டர் என்று லோகேஷ் கனகராஜ் சொல்வது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே ராகவா லாரன்ஸ் -இன் பென்ஸ் திரைப்படம் லோகேஷ் கனகராஜின் எல்சியு – வில் இணையப் போவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இதனை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

MUST READ