Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதியின் 'ஏஸ்' படத்திலிருந்து புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படத்திலிருந்து புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

-

- Advertisement -

விஜய் சேதுபதியின் ஏஸ் படத்திலிருந்து புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து கலக்கி வருகிறார். விஜய் சேதுபதியின் 'ஏஸ்' படத்திலிருந்து புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!ஏற்கனவே ட்ரெயின், காந்தி டாக்ஸ் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதே சமயம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடித்திருக்கும் விடுதலை 2 திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இவர், ஏஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை கடந்த 2018ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் எனும் படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்குகிறார். இந்த படத்தை 7சிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கரண் பி ராவத் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். விஜய் சேதுபதியின் 51வது படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ருக்மினி வசந்த், யோகி பாபு, பப்லு பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே மலேசியா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது நடிகை ருக்மினி வசந்தின் பிறந்தநாளை (டிசம்பர் 10) முன்னிட்டு இந்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ