கூலி படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இப்படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர் உபேந்திரா ஆகியோர் ரஜினியுடன் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோ ரோலில் நடிப்பதாகவும் நடிகை பூஜா ஹெக்டே ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாடியிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக சொல்லப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து சிக்கிடு பாடலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்தது இந்த படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே இப்படத்தின் டீசர் ஏற்கனவே தயாராகி விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில் வருகின்ற மார்ச் 14ஆம் தேதி இந்த டீசர் வெளியாகும் என லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.