சாண்டி மாஸ்டர் சூர்யா 45 படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு கங்குவா திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து 2025 மே 1ம் தேதி ரெட்ரோ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் சூர்யா அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். ஜிகே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்க அவருடன் இணைந்து திரிஷா, யோகி பாபு, நட்டி நடராஜ், சுவாசிகா, ஷிவதா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் பொள்ளாச்சி பகுதியில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது சூர்யா 45 படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றுக்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்தப் பாடல் தொடர்பான படப்பிடிப்பு சமீபத்தில் படமாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அடுத்தது ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.