spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமிர்ச்சி சிவா நடிக்கும் 'சுமோ' .... ட்ரைலர் குறித்த அறிவிப்பு!

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சுமோ’ …. ட்ரைலர் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

மிர்ச்சி சிவா நடிக்கும் சுமோ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.மிர்ச்சி சிவா நடிக்கும் 'சுமோ' .... ட்ரைலர் குறித்த அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028, சரோஜா ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மிர்ச்சி சிவா. அதை தொடர்ந்து இவர் தமிழ் படம், வணக்கம் சென்னை என பல படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றுள்ளார். கடைசியாக இவர் சூது கவ்வும் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இது தவிர இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் பறந்து போ எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் தான் கடந்த பல வருடங்களுக்கு முன்பாக சுமோ என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார் மிர்ச்சி சிவா. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க எஸ்.பி. ஹோசிமின் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.மிர்ச்சி சிவா நடிக்கும் 'சுமோ' .... ட்ரைலர் குறித்த அறிவிப்பு! இதில் மிர்ச்சி சிவா உடன் இணைந்து பிரியா ஆனந்த், யோகி பாபு, விடிவி கணேஷ், நிழல்கள் ரவி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னாவின் இசையிலும் ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவிடும் இந்த படம் உருவாகி இருக்கிறது. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த படம் வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 20) இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ