ஐசரி கணேஷ் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்ட செட்டில் நடைபெற்றுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளரும் வேல்ஸ் யுனிவர்சிட்டியின் நிறுவனருமான ஐசரி கணேஷ் திரைத்துறையில் கிட்டத்தட்ட 25 க்கும் மேலான வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இந்நிலையில் தான் கடந்த மே 9ஆம் தேதி ஐசரி கணேஷின் மகள் பிரீத்தாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டது.
அதன்படி ரஜினி, கமல், மணிரத்னம், கௌதம் மேனன் என பல பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
அதேசமயம் ஐசரி கணேஷ், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 1500க்கும் மேலானவர்களை திருமண நிகழ்ச்சிக்கு வரவழைத்து அவர்களுக்கு சிறப்பு மரியாதை வழங்கினார்.
இதற்காக ஐசரி கணேஷை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஐசரி கணேஷ் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது.
அதாவது ரூ. 30 கோடி பட்ஜெட்டில் சினிமாவை போல் செட் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன், கயடு லோஹர், கல்யாணி பிரியதர்ஷன், இயக்குனர் சங்கர், அர்ஜுன், சூரி, ரவி மோகன், வெங்கட் பிரபு, அதுல்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.