Homeசெய்திகள்சினிமாபுயல் வேகத்தில் வசூலை அள்ளும் 'லோகா'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புயல் வேகத்தில் வசூலை அள்ளும் ‘லோகா’…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

லோகா படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.புயல் வேகத்தில் வசூலை அள்ளும் 'லோகா'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் கல்யாணி பிரியதர்ஷன். இவரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் லோகா சாப்டர் 1: சந்திரா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய வேப்ஃபரர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார். டோமினிக் அருண் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் நஸ்லேன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சூப்பர்வுமன் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, திரைப்பிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மேலும் இந்த படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி உலக அளவில் வசூலை வாரி குவித்து வருகிறது. புயல் வேகத்தில் வசூலை அள்ளும் 'லோகா'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!அந்த வகையில் இப்படம் தற்போது வரை உலக அளவில் ரூ.202 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அளவில் சிறந்த சூப்பர் ஹீரோ படமாக கருதப்படும் இந்த படம் இனிவரும் நாட்களிலும் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தை 5 பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருப்பதாக துல்கர் சல்மான் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ