spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'காந்தாரா சாப்டர் 1': மாஸ்டர் பிளான் போட்ட ரிஷப் ஷெட்டி.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

‘காந்தாரா சாப்டர் 1’: மாஸ்டர் பிளான் போட்ட ரிஷப் ஷெட்டி…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி காந்தாரா சீரிஸ் குறித்து தரமான அப்டேட் கொடுத்துள்ளார்.'காந்தாரா சாப்டர் 1': மாஸ்டர் பிளான் போட்ட ரிஷப் ஷெட்டி.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!கன்னட சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கியிருந்த காந்தாரா திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தெய்வ நம்பிக்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பல தொழில்நுட்ப காரணங்களால் மாபெரும் வெற்றி படமாக அமைந்து அதிக வசூலையும் வாரிக் குவித்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.'காந்தாரா சாப்டர் 1': மாஸ்டர் பிளான் போட்ட ரிஷப் ஷெட்டி.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! இதைத்தொடர்ந்து ரிஷப் ஷெட்டி, ‘காந்தாரா சாப்டர் 1’ என்ற தலைப்பில் காந்தாரா-வின் பிரீக்குவல் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்தையும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இதில் ருக்மினி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே இந்த படத்தை வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 'காந்தாரா சாப்டர் 1': மாஸ்டர் பிளான் போட்ட ரிஷப் ஷெட்டி.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரிஷப் ஷெட்டி, காந்தாரா சீரிஸின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும் எனவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

MUST READ