தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வரும் முனீஸ்காந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் ‘தி டார்ம்’ (The Dorm). இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (First Look) போஸ்டர் தற்போது வெளியாகி, இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தை, ‘குட் ஸ்டஃப்’ (Good Stuff) தயாரிப்பு நிறுவனம் சார்பில் பி. டில்லி தயாரிக்கிறார். குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில், புதுமையான மற்றும் வித்தியாசமான கதைக்களத்துடன் இத்திரைப்படம் உருவாகி வருவதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நட்சத்திரப் பட்டாளம்
இப்படத்தில் முனீஸ்காந்துடன் இணைந்து, ஷாலினி,காசி தங்கம்,சபரீஷ்,அருண் கார்த்திக்,சாம் ஜான்,நிகில் நாயர்,வசுந்தரா ஸ்ரீநாத்உள்ளிட்டப் பல முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
திரைப்படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு இசையை சாம் விஷால் அமைத்துள்ளார். ஒளிப்பதிவுப் பணிகளை இளையராஜாவும், படத்தொகுப்புப் பணிகளை அனில் கிரிஷும், கலை இயக்கப் பணிகளை விமல் ராஜும் மேற்கொண்டுள்ளனர். தற்போது வெளியாகிப் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கணிசமாக உயர்த்தியுள்ளது. இத்திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
