KH 237 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், அதேசமயம் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று, வசூலிலும் சரிவை சந்தித்தது. அடுத்தது கமல்ஹாசன், ரஜினியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றன.
இதற்கிடையில் கமல், அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தில் தனது 237வது திரைப்படத்தில் நடிக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதன்படி தற்காலிகமாக ‘KH 237’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை கமல்ஹாசனே தயாரிக்கிறார். இந்த படமானது முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் படமாக உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கமல்ஹாசனின் பிறந்த நாளான இன்று (நவம்பர் 7) ‘KH 237’ படத்தின் இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், ஒளிப்பதிவாளராக சுனில், எடிட்டராக சமீர் ஆகியோர் பணியாற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Welcome to the world of Kamal Haasan#KamalHaasan #KHAA#HBDKamalHaasan#ActioninAction
A Film By @anbariv@ikamalhaasan #Mahendran
Music Composer – @jakes_bejoy
DOP – #SunilKS
Editor – #ShemeerKM
Production Designer – #VineshBanglan
Publicity Designer – @tuneyjohn… pic.twitter.com/t35EB21Qzx— Raaj Kamal Films International (@RKFI) November 7, 2025

மேலும் இந்த படமானது கமல்ஹாசனின் கதையில் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர கமல்ஹாசன், படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


