spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking NewsLIKE, SHARE & DIE.... மிரட்டும் லுக்கில் அனுராக் காஷ்யப்.... புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...

LIKE, SHARE & DIE…. மிரட்டும் லுக்கில் அனுராக் காஷ்யப்…. புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

அனுராக் காஷ்யப் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.LIKE, SHARE & DIE.... மிரட்டும் லுக்கில் அனுராக் காஷ்யப்.... புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் இமைக்கா நொடிகள், மகாராஜா ஆகிய படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த இரண்டு படங்களிலுமே இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அடுத்தது இவர், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 படத்திலும் நடித்திருந்தார். சுந்தர்.சியின் ஒன் 2 ஒன் படத்திலும் நடித்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இவர், ஜி.வி. பிரகாஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக ஏற்கனவே பேச்சு அடிபட்டது. இந்நிலையில் இவர் புதிய படம் ஒன்றில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. LIKE, SHARE & DIE.... மிரட்டும் லுக்கில் அனுராக் காஷ்யப்.... புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!அதன்படி இவர் நடிக்கும் புதிய படத்திற்கு அன்கில் 123 – UNKILL 123 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகவும், டார்லிங் படத்தின் இயக்குனர் ஷாம் அண்ட் இதை எழுதி இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த அறிவிப்பு போஸ்டரில் ‘LIKE, SHARE & DIE’ என்ற டேக் லைன் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த படமானது சைக்காலஜிக்கல் திரில்லர் படம் போல் தெரிகிறது. இந்த போஸ்டரில் அனுராக் காஷ்யப் மிரட்டலான லுக்கில் காட்டப்பட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ